கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் ஒரு நாள் தள்ளிவைப்பு – 100 பேருக்கு மட்டும் அழைப்பு!

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலிமரில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் ஏற்கெனவே ராஜஸ்தான் சென்றுவிட்டனர். அவர்கள் தங்குவதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணமகள் மும்பையிலிருந்து டிசைனர் மனீஷ் மல்ஹோத்ராவுடன் ஜெய்சாலிமர் புறப்பட்டுச் சென்றார். திருமணம் இன்றுதான் நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திருமணம் நாளை நடக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. நேற்று இரவு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கியாரா அத்வானியின் சகோதரர் மிஷ்ஹால் அத்வானி பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார். 

சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி

இன்று மருதாணி வைத்தல் மற்றும் மஞ்சள் வைக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக மருதாணி வைப்பதில் பிரபலமான வீனா மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டு இருக்கிறார். இதில் கரண் ஜோகர், நடிகர் சாஹித் கபூர் உட்படப் பலர் கலந்து கொள்கின்றனர். நாளை நடக்கும் திருமணத்திற்கு இரு தரப்பிலிருந்தும் 100 விருந்தினர்கள் மட்டும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தனது கணவருடன் திருமணத்துக்கு வந்துள்ளார். ஈஷா அம்பானி கியாராவின் பால்ய கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சியைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த பிறகு வரும் 12ம் தேதி மும்பையில் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருமணத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கியாரா அத்வானி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி

கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஒரு போதும் தங்களது காதலை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொண்டது கிடையாது. திருமணம் தொடர்பாகக்கூட இருவர் தரப்பில் எந்தவித அதிகாரபூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை. இருவரும் ராஜஸ்தானில் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தை நடிகை கத்ரீனா கைஃப்தான் கியாராவிற்குச் சொன்னதாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்து மும்பை திரும்பிய பிறகு பஞ்சாபி மற்றும் இந்து முறைப்படி மதச்சடங்குகள் நடக்க இருக்கின்றன. அதன் பிறகுதான் இருவரும் தேனிலவு செல்லவிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.