கொரோனா லாக்டவுன் நினைவலைகள்! மன அழுத்தத்தில் புழுங்கிய தனுஷ்

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழில் பல வெற்றிப்படங்கள் தந்த தனுஷ் வேலையில்லாத பட்டாதாரி என்ற படத்தில் நடித்த கதாநாயகன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், அவர் வேலையில்லாமல் மன அழுத்தத்தில் இருந்ததது தெரியுமா? கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறதா? கோலிவுட்டில் கொடி நாட்டி, பாலிவுட் சென்ற தனுஷ் அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டினார்.

பாலிவுட்டிலும் கவனம் பெற்ற நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எதுள்ளுவதோ இளமை என்ற திரைப்படம்மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழில் பல வெற்றிப்படங்கள் தந்த தனுஷ் வேலையில்லாத பட்டாதாரி என்ற படத்தில் நடித்த கதாநாயகன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், அவர் வேலையில்லாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியது தெரியுமா? ன்பது அவருக்கு கூடுதல் பெருமை என்று நினைத்த காலமும் தற்போது மலையேறி, ‘முன்னாள்’ மருமகனாகிவிட்டார்.

ஆனால், தனது நடிப்பினால், மாமியார் வீட்டு பந்தம் முறிந்தாலும், மகன்கள் என்ற சொந்தத்தை அவர் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை தனுஷ் நிரூபித்துவருகிறார். பட விழாவில் தனது மகன்களை இருபுறமும் அமரவைத்து அழகு பார்த்த தனுஷின் தந்தைப் பாசம் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே’ என்று பாட வைக்கிறது.

ஹாலிவுட்டுக்கும் சென்று அங்கு தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹாலிவுட்டில் அவர் நடித்த தி க்ரே மேன் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்புகள் பெற்ற தனுஷைத் தன் நமக்குத் தெரியும். ஆனால், பட வாய்ப்பு தொடர்பாக அவர் அண்மையில் சொன்ன செய்தி வைரலாகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெள்ளித்திரைக்கு வருகிறது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்குக்ம் இந்தப் படத்தின் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக காலடித்தடம் பதிக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார். தனுஷின் இந்த திரைப்படம், தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது.

இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின்  ஆடியோ லாஞ்சில் நடிகர் தனுஷ் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வேலையே இல்லாமல், தான் மன உளைச்சலில் இருந்ததாக நடிகர் தனுஷ் சொன்னதை யாராலும் நம்பமுடியவில்லை என்றாலும், சொன்னது தனுஷ் என்பதால் அதில் இருக்கும் உண்மை அனைவருக்கும் புரிந்தது.

“வாத்தி படத்தின் கதைக்களம் 90களில் இருக்கிறது. இந்த படத்துல நடித்தபோதுதான் ஆசிரியர் வேலை எவ்வளவு சிரமமானது, உன்னதமானது என்பதை புரிந்துக் கொண்டேன். நம் தலையெழுத்தை மாற்றுபவர்கள் தான் வாத்தியார்கள்’ என முதலில் ஆசிரியர்களை புகழ்ந்து பேசினார்.

அதன்பிறகு தனுஷ் சொன்னது தான் ஹைலைட்… ’கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் இயக்குனர் வெங்கி இந்தக் கதையை என்னிடம் சொன்னார். வேலையில்லாமல் மன உளைச்சலில் இருந்த நேரம் அது. வெங்கி சொல்ற கதைக்கு நோ சொல்லிவிடலாம் என்கிற மனநிலையில் கதையைக் கேட்டேன். ஆனால் கதை ரொம்ப பிடிச்சிருச்சு. வேற எதுவும் சொல்லாமல், எப்போ டேட்ஸ் வேணும்னு தான் அவரிடம் கேட்டேன். உங்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்னு நம்புறேன்” என கூறினார்.

இது கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் மட்டுமல்ல, உச்ச நடிகர்களும் சிக்கலில் அதாவது மனசிக்கலில் சிக்கியிருந்ததை வெளிப்படுத்துவதாக இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.