சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோ E13 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் மோட்டோ E சீரிஸ் வரிசையில் E13 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- டால்பி ஸ்பீக்கர்ஸ்
- ஐபி52 ரேட்டட் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ஸ்
- ஆக்டா-கோர் யுனிசிக் டி606 சிப்செட்
- பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது கேமரா
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- ட்யூயல் சிம் கார்ட் பயன்படுத்தும் வசதி
- 2ஜிபி / 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன்
- பேஸ் மாடல் போனின் விலை ரூ.6,999
- 4ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.7,999
- வரும் 15-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை தொடங்குகிறது
Don’t be like Mr Atke, & do everything ‘hatke’! Enjoy advanced capabilities with 2GB/4GB of RAM, 64GB built-in storage, 5000mAh Battery & much more! Get your #motoe13 starting at just ₹6,999* sale starts 15th Feb on @flipkart & at leading retail stores. https://t.co/YeXbComMZR pic.twitter.com/efD6FzKq34
— Motorola India (@motorolaindia) February 8, 2023