Oneplus Pad: 11.5 இன்ச் டேப்லெட் முதல் முறையாக இந்தியாவில் வெளியீடு! உடன் புதிய TV 65 Q2 Pro மற்றும் Keyboard 81 Pro அறிமுகம்!

இந்தியாவில் நேற்று (07/02/2023) ஒரே நாளில் பல ஒன்ப்ளஸ் கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் மக்கள் யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய டேப்லெட் சந்தையை குறிவைத்து ஒன்ப்ளஸ் நிறுவனம் புதிய பிரீமியம் Oneplus Pad ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் புதிய Flagship Oneplus TV 65 Q2 Pro மற்றும் Keyboard 81 Pro ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதன் விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

OnePlus Padடிஸ்பிலேஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடலாக இந்த Oneplus Tab உள்ளது. இதில் ஒரு மிகப்பெரிய 11.61 இன்ச் டிஸ்பிலே வசதி, 144HZ refresh rate, 2800×2000 (296 PPI), 500 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு போன்றவை உள்ளது. இதன் ஸ்க்ரீன் 88% டிஸ்பிலேவை ஆக்கிரமித்துள்ளது. மேலும் 2.5D Curved Glass, 552g எடை மற்றும் 6.54mm அளவு கொண்டுள்ளது.
OnePlus Pad விலை விவரம் (Oneplus Pad Price) இதன் முன்பதிவு ஏப்ரல் முதல் இந்தியாவில் தொடங்கும். இது WiFi வசதியுடன் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இதனால் நமது ஸ்மார்ட்போன்களில் இருக்கும் 5G Hotspot On செய்து இந்த கருவியில் 5G பயன்படுத்தலாம். இதன் விலை பற்றி இன்னும் Oneplus அறிவிப்பு வெளியிடவில்லை.
சிறப்பு வசதிகள் இந்த கருவி ஆண்ட்ராய்டு 13 கொண்டு இயங்குகிறது. இதில் Mediatek Dimensity 9000 சிப், 12GB LPDDR5 RAM, Dolby Vision மற்றும் Dolby Atmos வசதி, சிறந்த ஆடியோ தரம் கிடைக்க 4 ஸ்பீக்கர் கொண்ட அமைப்பு போன்றவை உள்ளன.
Oneplus Pad Connect இணைப்பாக நமக்கு Stylus pen மற்றும் Magnetic Keyboard வசதிகளும் உள்ளன. இதன் பின்பக்கம் 13MP கேமரா வசதி மற்றும் 8MP செல்பி கேமரா உள்ளது.
Oneplus Pad Battery இதில் ஒரு மிகப்பெரிய 9510mAh பேட்டரி உள்ளது. இதை நாம் பயன்படுத்தாமல் வைத்தால் கூட சுமார் 1 மாதங்கள் வரை Standby மோடில் அப்படியே இருக்கும். இதை சார்ஜ் செய்வதற்கு 65W Super VOOC பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இதனால் 1 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
Oneplus TV 65 Q2 Pro புதிய பிரீமியம் ஸ்மார்ட் டிவி ஒன்றை ஒன்ப்ளஸ்அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி அதன் முந்தய ஜெனரேஷன் மாடல் ஸ்மார்ட் டிவி வசதிகளை விட கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. டிஸ்பிலே வசதிகள் (Oneplus TV 65 Q2 Pro Screen Display)
இதில் ஒரு பெரிய 65இன்ச் 4K தரம் கொண்ட QLED டிஸ்பிலே உள்ளது. இதன் இமேஜ் தரம் (3840×2160), 120HZ refersh rate,97% DCI-P3 கலர் ஸ்பேஸ் கவரேஜ், 1200நிட்ஸ் ப்ரைட்னஸ் அளவு, Oxygen Play 2.0 ஆண்ட்ராய்டு டிவி OS உள்ளது.
சிறப்பம்சங்கள் (Oneplus TV 65 Q2 Pro Features) இதில் நமக்கு AVI, MKV, MP4, WMV வீடியோ சப்போர்ட் மற்றும் Dolby Atmos சவுண்ட் சப்போர்ட் வசதி கொண்ட 70W 2.1 சேனல் ஸ்பீக்கர்சவுண்ட் பார் உள்ளது. இதன் சவுண்ட் தரம் என்பது Dynaudio நிறுவனத்தால் டியூன் செய்யப்பட்டவை. இதில் நமக்கு Wifi சப்போர்ட் வசதி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் Oneplus கருவிகளுடன் சுலபமாக இணைக்கும் வசதியும் உள்ளது.
விலை விவரம்(Oneplus TV 65 Q2 Pro Price) இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் 99,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதன் முன்பதிவு மார்ச் 6 முதல் நடக்கும். இதன் விற்பனை மார்ச் 10 முதல் இந்தியாவில் நடைபெறும்.
Oneplus Keyboard 81 Pro இதில் ஒரு டபுள் கேஸ்கெட் டிசைன் உள்ளது. இதனால் நமக்கு டைப்பிங் செய்யும்போது மிருதுவாகவும் அதே நேரம் சத்தம் ஏற்படாமலும் இருக்கும். இது முழுவதும் லைட் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் முறையாக சுவிட்ச் மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நமக்கு பழக்கமான இடத்தில் சுவிட்ச் கீ மாற்றி வைத்துக்கொள்ளலாம். இது Apple MAC மற்றும் Windows என இரண்டிலும் வேலை செய்யும். இது Winter Bonfire மற்றும் Summer Breeze என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதனுடன் நமக்கு Oneplus போன்களில் இருக்கும் அதே Alert ஸ்லைடர் வசதியும் உள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் விற்பனை ஏப்ரல் முதல் துவங்கும் என்று தெரிவித்துள்ளது.செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.