Ai Chatbot Bard செய்த தவறால் 100 மில்லியன் டாலர் மதிப்பிழந்து Google!

உலகில் தற்போது பெரு பேசுபொருளாக இருப்பது
OpenAI ChatGPT
எனப்படும் தானியங்கி நுண்ணறிவு கருவி ஆகும். இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போலவே பதில் அளிக்கும். மனிதர்களை போலவே சிந்திக்கும் திறன் கொண்ட இவை Google நிறுவனத்திற்கே மிப்பெரிய ஆபத்தாக அமைந்துவிட்டது.

Microsoft நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி உலகளவில் ஒரே நாளின் 10 லட்சம் பயனர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. இந்த கருவியை Google நிறுவனத்திற்கு போட்டியாக Microsoft உருவாக்கியுள்ளது.

விரைவில்
Google Search
எனப்படும் தேடல் கருவியை காலி செய்ய Microsoft அதன் தேடல் கருவியான Bing உள்ளே இதை இணைக்கவுள்ளது. இதனால் Google தேடல் கருவிக்கு பதிலாக Microsoft Bing பயன்படுத்தி மக்கள் அவர்களுக்கு வேண்டியதை சுலபமாக செய்வார்கள் என்று Microsoft எண்ணுகிறது.

Google தேடல் கருவியை பயன்படுத்துபவர்களிடம் விளம்பரம் செய்து லாபம் ஈட்டும் Google நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிட்டது. இதனால் உடனடியாக அதற்கு எதிராக Google நிறுவனம் சார்பில் ஒரு AI கருவியை உருவாக்கிவருகிறது.

தற்போது அந்த கருவியால் Google நிறுவனத்திற்கு பெரும் அளவு சந்தையில் மதிப்பு இறங்கியுள்ளது.
‘Bard’
என்று அழைக்கப்படும் இந்த AI Chatbot தற்போது சோதனையில் உள்ளது. இந்த சோதனையில் மக்கள் கேட்ட கேள்விக்கு அது தவறான பதில்களை அளித்துள்ளது. இதன் காரணாமாக பிப்ரவரி 8 Nasdaq சந்தையில் 7.8 % மதிப்புகளை கூகுள் நிறுவனம் இழந்துள்ளது. இது 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்பு ஆகும்.

பாரிஸ் நகரில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த AI கருவியை சோதித்து பார்க்க கூகுள் அனுமதித்திருந்தது. அப்போது இந்த Bard AI கருவியில் தவறு இருப்பதை முதல் முதலில் Reuters நிறுவனம் கண்டுபிடித்தது. அந்த கருவியிடம் ‘ஒரு 9 வயது குழந்தை James Webb Space Telescope (JWST) என்ன செய்கிறது என்ற கேள்வி எழுப்பினால் என்ன சொல்வது’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அந்த AI கருவி ‘பால் வழிக்கு வெளியே இருக்கும் கிரகங்களை இது படம் பிடிக்கும்’ என்று பதில் தெரிவித்தது. இது தவறான பதில் ஆகும். இதனால் பலர் இதன் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிகிறது.

இந்த கருவியை
OpenAi ChatGPT
செய்வது போலவே கடினமான தகவல்களை மக்களுக்கு புரியும் வகையில் சுலபமாக தெரிவிக்க Google உருவாக்கியது. ஆனால் இதில் Google சற்று அவசரப்படுவது போல தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு AI கருவியில் சிறந்த கருவியாக OpenAI ChatGPT இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.