Twitter Blue இந்தியாவில் வெளியானது! மாதம் 566 ரூபாய்க்கு பெறலாம்!

எலன் மஸ்க்கின் ட்விட்டர்
நிறுவனம் அதன் புதிய
Twitter Blue செயலியை
இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக இந்த ட்விட்டர் ப்ளூ அமெரிக்கா, சவூதி அரேபியா, கனடா, ஜப்பான், UK, இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா போன்ற 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த புதிய Twitter Blue பயன்படுத்தி இனி யார் வேண்டுமானாலும் ட்விட்டரின் அதிகாரபூர்வ Blue Checkmark பெறமுடியும். இதற்கு அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் மாதம் ஒரு முறை சந்தா கட்டணம் செலுத்துவது.

இந்த ட்விட்டர் ப்ளூ இந்தியாவில் Android, iOS மற்றும் Web என மூன்று வித கருவிகளிலும் அறிமுகம் ஆகியுள்ளது. நாம் இணையதளத்தில் இதை பயன்படுத்தினால் மாதம் 650 ரூபாய் கட்டணமும் மொபைல் மூலம் பயன்படுத்தினால் மாதம் 900 ரூபாய் கட்டணமும் செலுத்தவேண்டும். இதற்காக வருட கட்டணமும் உள்ளது. நாம் இதை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த 6800 ரூபாய் செலுத்தவேண்டும். அதாவது மாதம் 566.67 ரூபாய் கட்டணம் வருகிறது.

Twitter Blue பயன்பாட்டு என்ன?

இது ஒரு கட்டண சந்தா முறை உள்ள சமூகவலைத்தள செயலி ஆகும். இதில் நாம் கட்டணம் செலுத்தியபின் நமது விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு நமக்கு ப்ளூ டிக் வழங்கப்படும். இந்த செயலி மூலமாக நம்மால் புதிய வசதிகளை பயன்படுத்தமுடியும். இதனால் நம்முடைய ட்வீட் பலவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ட்ரெண்டிங் பக்கத்தில் வரும்.

முக்கிய சிறப்பு வசதியாக நமக்கு 50% என்ற அளவிற்கு விளம்பரங்கள் குறைக்கப்படும். கூடுதலாக நம்மால் மிகப்பெரிய அளவு நீளம் கொண்ட வீடியோக்களை பதிவிடும் வசதியும் இதனால் நமக்கு கிடைக்கும்.

நாம் மாத கட்டணம் செலுத்தியதும் ட்விட்டர் ப்ளூ வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தலாம். ஆனால் உடனடியாக ப்ளூ டிக் நமக்கு கிடைக்காது. நம்மளுடைய அனைத்து விவரங்களையும் ட்விட்டர் நிறுவனம் ஆராய்ந்து உறுதி செய்த பிறகே நமக்கு BlueTik கிடைக்கும்.

இதுவரை
Twitter ப்ளூ டிக்
பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கியது. ஆனால் இனிமேல் யார் வேண்டுமானாலும் ட்விட்டர் ப்ளூ டிக் பெறலாம். மேலும் அதிகாரபூர்வ இயக்கங்கள் மற்றும் நபர்களுக்கு மட்டுமே இந்த Blue Tik வழங்கப்பட்டது. இனி எந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த Twitter Blue கணக்கை பயன்படுத்தமுடியும்.

Twitter Blue பெறுவது எப்படி?

90 நாட்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே இந்த Twitter Blue பயன்படுத்தமுடியும். நீங்கள் ட்விட்டர் ப்ளூ பயன்படுத்த தொடங்கிவிட்டால் நீங்கள் உங்களின் ப்ரொபைல் படம், பெயர் அல்லது விவரங்கள் எதையாவது மாற்றினால் உங்களின் ப்ளூ டிக் நீக்கப்படும். பின்னர் ட்விட்டர் மீண்டும் ஒருமுறை உங்களின் விவரங்கள் அனைத்தையும் சரிபார்க்கும். பின்னர் மீண்டும் உங்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.