மதுவுக்கு அடிமையான மகன்… கவனிக்க ஆளில்லாததால் முதிய தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வயதான தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுததியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்புராம் (87) – காமாட்சி (84) தம்பதியர். இவர்களுக்கு பரமராஜ் (48) என்ற மகனும், பாரதி (41) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான பரமராஜ், தாய் தந்தை இருவரையும் சித்திரவதை செய்து வந்துள்ளார். இதையடுத்து தம்பதியினர் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியைஅடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகரில் உள்ள மகள் பாரதி வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்துள்ளனர்.
image
இந்த நிலையில் பாரதி மற்றும் அவரது கணவர் குரோம்பேட்டைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது தம்பதியர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
image
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வயதான தம்பதி இருவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், பெற்ற மகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக கவனிக்காததால் அவதிப்பட்டு வந்த இருவரும் மனமடைந்து உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
image
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை – 600 028.

தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.