இந்தியாவில் iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Neo 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இதன் நியோ 7 சீரிஸ் போன் வரிசையில் இப்போது iQOO Neo 7 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போன் கேமிங் விளையாடும் பயனர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை தரும் எனத் தெரிகிறது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 8200 சிப்செட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000 mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியன்ட்
  • 5ஜி சப்போர்ட்
  • 8ஜிபி வேரியன்ட் போனின் விலை ரூ.29,999
  • 12ஜிபி வேரியன்ட் போனின் விலை ரூ.33,999
  • இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.