சொந்த மகளுக்காக… கிம் ஜோங் உன் சகோதரியை கொல்லலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்


அரசியல் போட்டியாளர்களை மொத்தமாக ஒழிக்கும் போக்கை கடைபிடிக்கும் கிம் ஜோங் உன் தமது சகோதரியை படுகொலை செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சி பொறுப்பு மகளிடம்

சமீப நாட்களாக கிம்மின் மகள் Kim Ju Ae தொடர்ச்சியாக பல பொதுக்கூட்டங்களில் காணப்படுகிறார் என்பதுடன், வடகொரியா ஊடக பிரபலங்கள் பலர் தெரிவிக்கையில், கிம் ஜோங் உன் ஆட்சி பொறுப்பை தமது மகளிடம் ஒப்படைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

சொந்த மகளுக்காக... கிம் ஜோங் உன் சகோதரியை கொல்லலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் | Kim Jong Un About To Murder His Sister

@AP

மட்டுமின்றி, ஒருகட்டத்தில் வடகொரியாவின் முகமாக அறியப்பட்ட கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் சமீப காலமாக பொதுவெளியில் எங்கும் காணப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Kim Ju Ae என்பவர் கிம்மின் மகள் எனவும், இனி அவர் கிம்முடன் அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்வார் என வடகொரிய நிர்வாகம் 2022 நவம்பர் மாதத்தில் தான் உறுதி செய்தது.

முன்னர் தமது சகோதரி யோ ஜோங்கின் அரசியல் நகர்வுகளை கிம் ஜோங் ஆதரித்து வந்துள்ளதுடன், சீனாவுக்கும் தென் கொரியாவுக்கும் அனுப்பி அரசு சார்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் அனுமதித்திருந்தார்.

சொந்த மகளுக்காக... கிம் ஜோங் உன் சகோதரியை கொல்லலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் | Kim Jong Un About To Murder His Sister

@getty

அடுத்த இலக்கு சகோதரி

கிம் ஜோங் ஏற்கனவே தமது தாய்மாமா மற்றும் உடன் பிறவா சகோதரரை அரசியல் காரணங்களுக்காக பலிவாங்கியுள்ளார்.
அடுத்த இலக்கு யோ ஜோங்காக இருக்கவே வாய்ப்பு என சியோலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் முன்னாள் மூத்த இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஊடகங்களில் அடிக்கடி முகம் காட்டத் தொடங்கியதும், சர்வதேச பார்வையை தம்பக்கம் திருப்பியதும் யோ ஜோங்கை கிம் ஜோங் புறக்கணிக்க காரணமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

சொந்த மகளுக்காக... கிம் ஜோங் உன் சகோதரியை கொல்லலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் | Kim Jong Un About To Murder His Sister

@getty

மேலும், தமது சாத்தியமான அல்லது அரசியல் வாரிசாக தமது சகோதரியை வெளி ஊடகங்கள் கட்டமைப்பதை கிம் ஜோங் அதிர்ச்சியுடன் எதிர்கொண்டிருப்பார் எனவும் கூறுகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.