Mayilsamy:கேளம்பாக்கம் கோவில் கருவறையில் மயில்சாமி போட்டோ வைத்து பூஜை: காரணம்

Mayilsamy photo in temple: மயில்சாமி தன் கடைசி இரவுப் பொழுதை கழித்த மேகநாதேஸ்வரர் கோவில் கருவறையில் அவரின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்திருக்கிறார்கள்.

மயில்சாமிநகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரி அன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. சிவ பக்தரான அவர் சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் இருக்கும் மேகநாதேஸ்வரர் கோவிலில் தான் இரவு முழுக்க இருந்திருக்கிறார். சிவமணி டிரம்ஸ் வாசித்ததை ரசித்து கேட்டிருந்திருக்கிறார். மேலும் கோவிலில் பாட்டு பாடவும் செய்துள்ளார்.

மரணம்அதிகாலை 3 மணி அளவில் தன் குடும்பத்தாரை வீட்டில் விட்டுவிட்டு திருவான்மியூரில் இருக்கும் மருதேஸ்வரர் கோவிலில் உங்களை சந்திக்கிறேன் அண்ணா என சிவமணியிடம் சொல்லிவிட்டு கிளம்பியவர் இறந்துவிட்டார். இந்நிலையில் மேகநாதேஸவரர் கோவிலின் கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்திருக்கிறார்கள். தீவிர சிவ பக்தரான மயில்சாமி மேகநாதேஸ்வரர் கோவிலுக்கு பல உதவிகள் செய்து வந்திருக்கிறார்.
ஆத்மாகாசு பணம் பார்க்காமல் கோவிலுக்காக உதவிய மயில்சாமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி தான் அவரின் புகைப்படத்தை கருவறையில் வைத்து பூஜை செய்ததாக அர்ச்சகர் தெரிவித்துள்ளார். கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதரவுமயில்சாமி இறந்ததில் இருந்து அவரை பற்றி பலரும் பெருமையாக பேசி வருகிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள், சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுகிறார்கள். ஆனால் இதே மயில்சாமி உயிருடன் இருந்தபோது யாருமே கண்டுகொள்ளவில்லையே அது ஏன் என ஒரு ஃபேஸ்புக் போஸ்ட் வலம் வந்து கொண்டிருக்கிறது.

தேர்தல்விருகம்பாக்கம் தொகுதி மக்கள் வெள்ளத்தால் கஷ்டப்பட்டபோது ஓடியோடி உதவி செய்தார் மயில்சாமி. தன் வீட்டிற்கு அருகிலேயே சமையல் செய்து மக்களின் வீட்டிற்கே சென்று கொடுத்து அவர்களின் பசியாற்றினார். ஆனால் சட்டசபை தேர்தலில் அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. அவ்வளவு உதவி செய்த மயில்சாமிக்கு 1, 440 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

​Mayilsamy:மயில்சாமி உசுரோட இருந்தப்போ கண்டுக்காம இப்போ மட்டும் அழுவது, புகழ் பாடுவதா?

பிரபலங்கள்மயில்சாமி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டபோது திரையுலகினர் யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒரு அறிக்கை கூட விடவில்லை. ஏன் ஒரு ட்வீட் கூட போடவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு அதற்குள் போய்விட்டாயே, என்ன அவசரம் நண்பா என்று கேட்டு கண்ணீர் விடுகிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள். இதெல்லாம் மயில்சாமிக்கு தெரியப் போவது இல்லை. அவர் உயிருடன் இருந்தபோது கொண்டாடியிருந்தால் அவர் சந்தோஷப்பட்டிருப்பார். உயிருடன் இருக்கும்போது தான் நமக்கு யாரையும் பாராட்ட மனது வராதே என அந்த ஃபேஸ்புக் போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.