மு.க.ஸ்டாலின்: பெரியார் இல்லாத கவலையும், திராவிட மாடல் அரசின் எழுச்சியும்!

சர்வதேச மகளிர் தினம் 2023ஐ ஒட்டி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி சிறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முதல்வர்

தலைமை வகித்தார். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மார்ச் 8ன் சிறப்பு

இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், என்னுடைய பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களே… நமது நாட்டின் வளர்ச்சி என்பது மகளிர் கைகளில் தான் இருக்கிறது. அதனால் தான் அவர்களை போற்றுவதன் மூலம் இந்த நாட்டை போற்றிக் கொண்டிருக்கிறோம். மார்ச் 8 என்பது மகளிருக்கு மட்டுமின்றி மனித குலத்திற்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமானதாக விளங்குகிறது.

ஸ்டாலின் கவலை

தற்போது பெண்கள் எத்தகைய உயர் நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை பார்க்க பெரியார் இல்லையே என்ற கவலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சங்க காலம் முதலே பெண்கள் உயர்வானவர்களாகவும், மதிப்பு மிக்கவர்களாகவும் போற்றப்பட்டு வருகின்றனர். இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் பெண்கள் முடக்கப்பட்டார்கள்.

பெரியார் பட்டம்

இதிலிருந்து பெண்களை மீட்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது. இதுதான் திராவிட இயக்கம். பெரியார் என்ற பட்டத்தை தந்தது பெண்கள் தான். 1938ஆம் ஆண்டு பெண்கள் மாநாட்டில் தான் அமலுக்கு வந்தது. பெண்களின் நலனிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் உயர்கல்வி கற்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

திராவிட மாடல் அரசு

பெண்களை உயர்கல்வி படிக்க வைத்தல், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல், மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், அவர்களுக்கு கடன் கொடுத்தல், புதிய தொழில்களை செய்ய வைத்தல், உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பெறுதல் என அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.

பெண் ஓதுவார்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அதில் ஒரு பெண் ஓதுவாரும் இடம்பெற்றுள்ளார். இதுதான் திராவிட மாடல். பெண்கள் பாதுகாப்பில் அச்சமின்றி வாழ்வதற்கு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்ணுரிமை சிந்தனையில் ஒவ்வொரு ஆணும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று

கூறியிருக்கிறார்.

மகளிர் தினம் 2023

உங்கள் மகளை மனதில் வைத்து, சகோதரியை மனதில் வைத்து பெண் விடுதலை குறித்து ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அப்படி ஒரு நிலை வர வேண்டும். மகளிர் தினம் பெண்கள் மட்டும் கொண்டாடும் நிலை மாறி ஆண்களும் கொண்டாடும் நிலையாக மாற வேண்டும்.

கல்வியில், வேலைவாய்ப்பில், தொழிலில், சமூகத்தில், சிந்தனையில் வளர்ச்சி ஏற்படுத்துவதில் தான் திராவிட மாடல் ஆட்சி என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறேன். அத்தகைய சிந்தனை மாற்றத்தை விதைக்க இதுபோன்ற மகளிர் தின விழாக்கள் அமையட்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.