காங்கிரஸ் கரண்ட் கொடுக்காததால் மக்கள் தொகை பெருகியது; பாஜக அமைச்சர் பலே.!

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படாததால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மநிலத்தில் வருகிற மே மாத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் அக்கூட்டணி கட்சிகளின் ஐந்து ஆண்டுகள் ஆட்சி காலம் முடிவதற்குள், அங்கிருந்த எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவியதால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜக அரியணையில் ஏரியது.

இத்தகைய சூழலில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் பாஜகவிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீண்டும் ஆட்சியை தக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் படி, கடந்த தேர்தலைப் போல எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், கர்நாடகாவில் மீண்டும் தொங்கு சட்டமன்றம் அமையக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் காரணமாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற கருத்து பரவிவருகிறது. மேலும் இந்த தேர்தலில் ஹிஜாப் விவகாரம், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல், 40 சதவிகித கமிஷன் உள்ளிட்ட விவகாரங்கள் பாஜகவிற்கு பின்னடவை தரக்கூடும் என கூறப்படுகிறது.

அதன்காரணமாக பெங்களுருவில் உள்ள முஸ்லீம்கள், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்டோரின் வாக்குரிமையை பறிக்க பாஜக போட்ட திட்டம் சமீபத்தில் அம்பலமானது. அதன்படி ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் போலி வாக்காளர்கள் என்ற பெயரில் அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமீபத்தில் ஊழல் பணம் வாங்கிய போது பாஜக எம்எல்ஏ கையும் களவுமாக பிடிபட்டது பேசுபொருளானது.

இத்தகைய சூழலில் கர்நாடகாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றனர். கர்நாடகாவில் ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக அறிவித்த நிலையில், இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

வடமாநிலத்தவர் சர்ச்சை; பொய் செய்தி பரப்பிய பீகார் நபர் கைது..போலீஸ் அதிரடி.!

இந்தநிலையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, “மாநிலத்தில் இப்போது, இலவச மின்சாரம் தருவதாக காங்கிரஸ் கூறுகிறது. இலவச மின்சாரம் தருவார்கள் என்று நம்புகிறீர்களா? அவர்கள் ஆட்சி காலத்தில் மின்சாரம் கொடுக்கவே இல்லை. கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களால் (பாஜக) 24 மணி நேர மின்சாரம் கொடுக்க முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குறைவான மின்சாரம் வழங்கியதால் தான் இங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.