வீராங்குப்பம் கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஆம்பூர்: வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா சீறிப்பாய்ந்த காளைகள் விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினார்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில், மூன்றாம் ஆண்டு எருது விடும் விளையாட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் வாடிவாசல் இருந்து காளைகளை அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அதிவேகமாக சென்றடையும். முதலில் செல்லும் காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 1 லட்சத்து 5000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 68 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

எருது விடும் விழாவில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆம்பூர் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன் உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அரசு அதிகாரிகளின் தலைமையில் மாடு பிடி வீரர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

எருது விடும் விழாவில் மக்கள் அதிகமான அளவில் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் விழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய எருது விடும் விழாவை அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வீர விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கம். மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல், வட மாவட்டங்களான தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம்.

இங்கு நடைபெறும் எருதுவிடும் விழாக்களில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் கடக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இதே போல், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளிலும் எருதுவிடும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.