சொந்த மகனென தெரியாமல் தந்தை செய்த அதிர்ச்சியூட்டும் செயல்., பிரித்தானியாவில் அசாதாரண சம்பவம்


பிரித்தானியாவின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தில் நபர் ஒருவர் கத்தி முனையில் தவறுதலாக தனது சொந்த மகனிடம் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சொந்த மகனிடம் கொள்ளை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஒரு நபர் தனது சொந்த மகனை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த நபருக்கு அது அவரது சொந்த மகன் என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவின் க்ரான்ஹில் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 45 வயது முகமூடி அணிந்த நபர் ஒரு பதின்ம வயது வாலிபரை குறிவைத்த சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞன், 10 பவுண்டுகள் எடுக்க தனது வீட்டிற்கு அருகில் இருந்த பண இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளார். பணத்தைச் சேகரித்த பிறகு திரும்பும்போது, இடது புறமாக முகமூடி அணிந்த ஒருவர் தனது அருகில் பதுங்கியிருப்பதைக் கண்டார்.

சொந்த மகனென தெரியாமல் தந்தை செய்த அதிர்ச்சியூட்டும் செயல்., பிரித்தானியாவில் அசாதாரண சம்பவம் | Uk Man Mistakenly Rob His Own Son KnifepointCredit: Getty – Contributor

குரலில் தந்தையை அடையாளம் கண்டு அதிர்ச்சி

அவரை சுவரோடு தள்ளி அழுத்திய முகமூடி கொள்ளைக்காரன், சிறுவனின் கழுத்தில் ஒரு பெரிய சமையலறை கத்தி அழுத்தப்பட்டதை சிறுவன் உணர்ந்தான். அப்போது முகமூடி அணிந்த நபர், பணத்தை தருமாறு கோரியுள்ளார்.

ஆனால், சிறுவன் உடனடியாக அவரது குரலில் இருந்து தனது தந்தையை அடையாளம் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவன் அப்பாவிடம், ”நீ சீரியஸா இருக்கியா? நான் யாரென்று தெரியுமா?” கேட்க, அதற்கு “நீ யாராக இருந்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை” என்று கூறியுள்ளார்.

பின்னர், சிறுவன் தனது ஹூடியை கீழே இறக்கி, “என்ன செய்கிறாய்?” என்று கேட்டுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த அந்த நபர், “என்னை மன்னித்துவிடு, இப்போது எனக்கு செய்வதென்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

பொலிசாருக்கு தகவல்

உடனே மகன் அங்கிருந்து தப்பியோடி, நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் கூறிதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொள்ளையன் கைது செய்யப்பட்டு, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

அந்த நபருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, “இவை ஒரு அசாதாரண நிகழ்வுகள்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.