Samsung Galaxy Ultra ஸ்மார்ட்போனின் 'Moon Camera' வசதி போலியா? அம்பலப்படுத்திய பயனர்!

ஆண்ட்ராய்டு உலகில் மிக சிறந்த ஸ்மார்ட்போனாக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் Galaxy S23 Ultra போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 1.5 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீரிஸ் நிகராக இருக்கும் ஒரு போன் ஆகும். இந்த போனின் Moon Camera வசதியை உலகில் பலர் மிகவும் ஆச்சர்யமுடன் பார்க்கிறார்கள்.

எப்படி பூமியில் இருந்து நிலாவை நாம் எடுக்கும் புகைப்படம் இவ்வளவு தெளிவாக உள்ளது? என்று பலர் வியக்கிறார்கள். நேரடியாக நாம் நிலாவை பார்க்கும்போது நமக்கு கிடைக்கும் அதே அனுபவம்
சாம்சங் Galaxy S23 ultra
மூலமாக நாம் எடுக்கும்போது கிடைக்கிறது.

பலர் இதை உண்மை என்றே நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் Reddit பயனர் ஒருவர் இந்த படங்கள் அனைத்தும் போலியானவை என்று ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார். இது எப்படி போலியானவை என்று அவர் நிரூபித்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் அவர் நிலாவின் மிகவும் தரம் வாய்ந்த Hi-Res Image ஒன்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார்.பின்னர் அதை 170 x 170 என்ற Pixel அளவிற்கு குறைத்து அதில் போட்டோ எடிட்டிங் வசதியாக இருக்கும் Gaussian Blur மூலம் தரத்தை குறைத்துள்ளார். இதனால் நிலவின் சில முக்கியமான விவரங்கள் மறைந்துவிடுகின்றன.பின்னர் ஸ்க்ரீன் முழுவதும் நிலவின் புகைப்படத்தை நிரப்பி அதை Samsung Galaxy S23 Ultra மூலமாக படம் எடுத்துள்ளார். அப்போது Blur செய்யப்பட்ட இடங்களை தானாகவே AI உதவியுடன் சரிசெய்து நமக்கு நிலவின் புகைப்படத்தை தரம் வாய்ந்தது போல காட்டுகிறது.AI மூலமாக வரைந்து நமக்கு நமக்கு உண்மையான நிலவின் புகைப்படம் போல மாற்றி நேரடியாக பார்ப்பது போன்ற அனுபவத்தை சாம்சங் தருவதாக அவர் கூறியுள்ளார்.

All Credits: u/ibreakphotos

என்ன முடிவு?

இந்த சோதனையின்படி சாம்சங் கூறுவது போல அதன் Camera Optics நிலாவை படம்பிடிக்கும் அளவிற்கு திறன் படைத்தது இல்லை. அதற்கு பதிலாக அனைத்து வேலைகளையும் AI செய்கிறது. இல்லாத விவரத்தை இருப்பது போல AI நமக்கெல்லாம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

எப்போது நிலவு பூமியை சுற்றிக்கொண்டே இருப்பதால் AI பயன்படுத்தி நிலவு போன்ற படத்தை காட்டவைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு நிகராக சாம்சங் நிறுவனத்தை பார்ப்பது இந்த கேமரா வசதிக்காக மட்டுமே.

முக்கியமாக ‘Moon Camera’ என்பது வாடிக்கையாளர்களை கவர
சாம்சங் நிறுவனம்
பயன்படுத்தும் ஒரு யுக்தி ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது 1,24,999 லட்சம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதன் டாப் வேரியண்ட் விலை 1,54,999 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் 200MP முக்கிய கேமரா வசதி உள்ளது. இதன் கேமரா அப்டேட் இந்த மாதம் வெளியாகும் என்று சாம்சங் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதில் 5000mAh பேட்டரி, Snapdragon 8 Gen 2, Dynamic AMOLED டிஸ்பிலே, 120HZ Refresh Rate, Samsung One UI வசதி உள்ளது. இதனுடன் நமக்கு S pen வசதியும் கிடைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.