அடுத்தடுத்து வெளியாகும் மதன் ரவிச்சந்திரன் வீடியோ! ஆட்டம் காணும் பிரபலங்கள்..! என்ன நடந்தது?

Madan Ravichandran Sting Operation On Tamil Youtubers: இன்றைய அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட 4 வீடியோக்களின் பின்னணி என்ன? திடீரென பல மாத கால அமைதிக்குப் பிறகு ராக்கி பாய் ரேஞ்சுக்கு கெட்-அப் மாற்றத்தோடு நான் திரும்பி வந்துட்டேன் என்னும் தோரணையுடன் மதன் வர என்ன காரணம்? பார்க்கலாம்.

கே.டி. ராகவன் சர்ச்சை

கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு பாஜகவில் முக்கிய புள்ளியாக இருந்த கே.டி.ராகவன் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் வீடியோ காலில் பாஜக பெண் நிர்வாகியுடன் ஆபாசமாக செய்யும் செயல் அவரது கட்சி பதவியை மட்டும் அல்லாமல், அவரது அரசியல் வாழ்க்கைக்கே எண்ட் கார்ட் போட்டது. அந்த வீடியோவை வெளியிட்டது மதன் ரவிச்சந்திரன்தான். இந்த வீடியோ வெளியாகும் சில மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் தன்னை மதன் இணைத்துக்கொண்டார். இந்த வீடியோ வெளியானதும், அண்ணாமலை மதனையும் அவருக்கு உதவிய வெண்பா என்பவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

உடனே வேறொரு வீடியோ வெளியிட்ட மதன் அண்ணாமலை தான் தன்னை இப்படி செய்ய சொன்னதாக தெரிவித்து ஆடியோ ஆதாரங்களை பகிர்ந்தார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதோடு கே.டி.ராகவன் விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மலர்கொடி கமிஷன் குறித்தும் மதன் பேசியுள்ளார். அதன்பிறகு சில நாட்களில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் மதன் வெளியிட்ட வீடியோவால் பாஜகவுக்கு இன்று வரை ஒரு அவப்பெயர் தொடர்ந்து வருகிறது. வீடியோ கட்சி, ஆடியோ கட்சி என்றெல்லாம் பாஜகவை அரசியல் கட்சியினர் கலாய்த்து வருகின்றனர். 

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக ட்வீட்டுகளை வெளியிட்டு வருகிறார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற கட்சி பாஜக என எழுதி வருகிறார். அண்ணாமலைக்கு எதிராக பாஜகவில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கு நடுவே தான் இப்போது மதன் ரவிச்சந்திரன் என்ற யூடியூபர் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். திடீரென நேற்று தொடங்கப்பட்ட ஒரு யூ-ட்யூப் பக்கத்தில் அடுத்தடுத்து சில வீடியோக்கள் வெளியாகின. அதில் மதனும் அவருடைய பாட்னர் வெண்பாவும் அடுக்கடுக்காக அண்ணாமலை குறித்து, பத்திரிகையாளர்கள் குறித்தும்  பேசி இருந்தனர். அதோடு பல ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். 

மது விருந்தில் யார் யார்…?

Sting Operation என்ற தலைப்புடன் வீடியோ வெளியிட்டுள்ள மதன், பல யூடியூப் நெறியாளர்களை டார்கெட் செய்து அவர்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். கோவையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றுக்கு மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, ராஜ்வேல் நாகராஜ், முக்தார், ரவீந்திரன் துரைசாமி  உள்ளிட்ட யூ-ட்யூப் பிரபலங்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு அங்கு மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் பணம் வாங்குவது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. 

இந்த ஆதாரங்களை வெளியிட்டு இவர்கள் கட்சி சார்பாக பணம் வாங்குவதாக பகிரங்க குற்றச்சாட்டை மதன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாதேஷ் பேசும் போது, அவர் பணிபுரியும் யூடியூப் சேனலில் தேர்தல் சமயத்தில் 4 கட்சிகளிடம் 1 கோடியே 20 லட்சம் பெற்றதாக கூறுகிறார். அதேபோல ஐயப்பன் ராமசாமி பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளார். அவர், தனக்கு இன்ஸ்டாவில் எக்கச்சக்க பெண் பாலோயர்ஸ் உள்ளதாகவும், அவர்கள் ஐடி-யை தனது அட்மினிடம் கொடுத்தால் அந்த பெண்களை சாப்பிடுவிடுவான் என்றும் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். 

அண்ணாமலையின் நிலை?

இதற்கு நடுவே 60 பத்திரிகையாளர்களை தான் பாலோ செய்ததாகவும், அதில் 40 பேர் வரை நட்சத்திர ஹோட்டல்களுக்கு இரவில் செல்வதாகவும் மதன் கூறுகிறார். அதோடு அண்ணாமலைக்கும் தங்களுக்குமான பிரச்சனையில் நடுவே யாராவது வந்தால் உங்கள் வீடியோக்களும் வெளியாகும் என மிரட்டுகிறார்கள். அதோடு இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து வழக்கு தொடரப்போவதாகவும் கூறுகிறார்கள். 

இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர், மாதேஷ் மற்றும் ஜி ஸ்கொயர் என்ற தலைப்பிலும் மதன் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும், அண்ணாமலையின் கட்சி பதவி பறிக்கப்படுமா? யூ-ட்யூப் பிரபலங்களின் நிலை என்ன ஆகும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.