விலைவாசி உயர்வு காரணமாக வாரத்தில் ஒரு வேளை மட்டும் சாப்பிடும் லண்டன் பெண்…


லண்டனில் வாழும் பெண் ஒருவர், விலைவாசி உயர்வு காரணமாக, வாரத்தில் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்.


நோயால் வேலையிழந்த பெண்

Tottenham என்னும் இடத்தில் வாழும் Yasemn Kaptan (46), எலும்புகளை பாதிக்கும் ஒரு நோய் வந்ததால் வேலையை விடும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

அரசு வழங்கும் உதவித்தொகையை மட்டுமே நம்பி வாழும் Yasemn, தான் நல்ல வேலையில் இருந்தபோது ஆறு பூனைகள் வளர்த்துவந்துள்ளார்.

இப்போது வேலை போனாலும், தான் பிள்ளைகள் போல வளர்த்துவரும் பூனைகளை கைவிட அவருக்கு மனமில்லை.

விலைவாசி உயர்வு காரணமாக வாரத்தில் ஒரு வேளை மட்டும் சாப்பிடும் லண்டன் பெண்... | London Woman Eats Only One Meal

SWNS


வாரத்தில் ஒரு வேளை மட்டுமே உணவு

தன் பூனைகளைக் கைவிட மனமில்லாததால், தனக்குக் கிடைக்கும் பணத்தை பூனைகளுக்காக செலவிடுகிறார் Yasemn. ஆகவே, அவருக்கு சாப்பாட்டுக்கு போதுமான பணம் இல்லை.

எனவே, வாரத்தில் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணுகிறார் Yasemn. மற்ற நாட்களில் மூன்று வேளையும் புதினா இலைகளைப் போட்டு தேநீர் போன்றவற்றை மட்டுமே உட்கொள்கிறார் அவர்.

விலைவாசி உயர்வு காரணமாக வாரத்தில் ஒரு வேளை மட்டும் சாப்பிடும் லண்டன் பெண்... | London Woman Eats Only One Meal

SWNS

அப்படியே சாப்பிட்டாலும், காய்கறிகள், தயிர் போன்றவற்றைதான் சாப்பிடுகிறார் Yasemn. இப்படி சரியாக சாப்பிடாததால், 88 கிலோவிலிருந்து 57 கிலோவாக உடல் எடை குறைந்துவிட்டார் அவர்.

தனது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும், பிள்ளைகள் போல தான் வளர்த்துவரும் பூனைகளை கைவிட மனமில்லாததால், தான் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை என தன் பூனைகளை கண்ணும் கருத்துமாக பராமரித்துவருகிறார் Yasemn.

விலைவாசி உயர்வு காரணமாக வாரத்தில் ஒரு வேளை மட்டும் சாப்பிடும் லண்டன் பெண்... | London Woman Eats Only One Meal

SWNS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.