தமிழ்நாட்டில் புதிதாக 600 எஸ்.ஐ.க்கள் 3,000 காவலர் நியமிக்க திட்டம்: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

நாகர்கோவில்: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர்அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை என்பது மிக, மிக குறைவு. கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் சப் இன்ஸ்பெக்டர்களை பணியில் சேர்த்து உள்ளோம். 444 சப் இன்ஸ்பெக்டர் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் 1ம் தேதி முதல் பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள். பயிற்சி முடிந்து அவர்களும் பணிக்கு வந்து விடுவார்கள். அதுபோல்  பத்தாயிரம் காவலர்கள் நியமிக்கும் திட்டம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 3500 காவலர்கள் தேர்வு செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான ரிசல்ட் வந்ததும் அடுத்த கட்டமாக 600 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியமர்த்தும் திட்டமும் உள்ளது. மேலும் 2ம் கட்டமாக 3000 லிருந்து 4000 காவலர்களை எடுக்கும் திட்டமும் உள்ளது.  தமிழ்நாட்டில் 1 லட்சத்து 35 ஆயிரம் காவலர்கள் உள்ளனர். இதில் பெண் காவலர்கள்  35 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். குறிப்பாக இடமாறுதலில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.