லண்டனில் பொலிஸ் துரத்தியதில் பரிதாபமாக பலியான நபர்: முதல் முறையாக வெளியான புகைப்படம்


கிழக்கு லண்டனில் பொலிஸ் துரத்தலைத் தொடர்ந்து பரிதாபமாக பலியான நபரின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்களை முதல் முறையாக அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளது.

விபத்து காரணமாக மரணம்

பொலிசார் துரத்திய நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தண்டவாளங்களில் மோதி விபத்து ஏற்பட்டதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரது பெயர் ஆலமின் காசி என்று குறிப்பிட்டுள்ள பொலிசார், அவருடன் பயணித்த இன்னொருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், மருத்துவமனை சிகிச்சையில் அவர் குணம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மனைவி மற்றும் பிறந்து 2 வாரங்களேயான குழந்தையுடன் ஆலமின் வசித்து வந்துள்ளார்.
மட்டுமின்றி, நாள் ஒன்றுக்கு 10 மோட்டார் சைக்கிள் வரையில் திருடும் குழு ஒன்றில் இணைந்து செயல்பட்டுவந்த ஆலமின் தமது 23ம் வயதில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

லண்டனில் பொலிஸ் துரத்தியதில் பரிதாபமாக பலியான நபர்: முதல் முறையாக வெளியான புகைப்படம் | London Police Chase Man Killed

கொள்ளை, வழிப்பறி உட்பட மோட்டார் சைக்கிள் திருட்டு, அலைபேசி திருட்டு சம்பவங்களிலும் ஆலமின் ஈடுபட்டு வந்துள்ளார்.
திருட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஆலமின் பொலிசாரை ஏமாற்றி பறந்து சென்றுள்ளார்.

தனி அமைப்பால் விசாரணை

இதில் விபத்தில் சிக்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அவருடன் பயணித்த நபரும் விபத்தில் சிக்கியிருந்தாலும், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றே மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இருப்பினும், பொலிஸ் துரத்தலை அடுத்து ஒருவர் மரணமடைந்துள்ளதால், பொலிசாரின் நடவடிக்கை குறித்தும் தனி அமைப்பால் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.