மோடி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்ட நாகை காங்கிரஸார் -எதிர்ப்பு தெரிவித்த போலீசாருடன் மோதல்

நாகை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிபிசி வெளியிட்ட மோடியின் ஆவணப்படம் நாகூர் பேருந்து நிலையத்தில் திரையிடும் நிகழ்வுக்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் ஆவணப்படத்தை நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட முயற்சித்து வருகின்றனர். இன்று மாலை நாகூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக தெருமுனை பிரசாரம் மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நடைபெற்றது. பிரசாரத்தின் முடிவில் அங்கு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
image
இதில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் திமுகவினர், மதிமுகவினர், விடுதலைச் சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள் கூடிநின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கூடியிருந்த பாஜகவினரை, ’ஆவணப்படத்தை திரையிட மாட்டார்கள்’ என சமாதானப்படுத்திய பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் ’ஆவணப்படம் திரையிட வேண்டாம்; சட்ட ஒழுங்கு சீர்கெடும்’ என என காங்கிரஸ் கட்சியினரிடம் எடுத்துக் கூறினார்.
image
ஆனால் திரைப்படம் திரையிடுவதில் மட்டுமே காங்கிரஸார் மும்முரம் காட்டி வந்ததால் திரை இட்ட தொலைக்காட்சி பெட்டியை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர் அப்போது காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர். அப்போது கூடி இருந்தவர்கள் ஒவ்வொருவராக காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆவணப்படம் தானே போடுகிறோம் ஆபாச படமா போடுகிறோம் என கேள்வி எழுப்பினார்.
image
பின்னர் டி எஸ் பி பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல வைத்தார். அதிரடி படையினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்க குளிக்கப்பட்டு இருந்தால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.