பாஜக ஒரு கட்சியே இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவளத்தில் நடைபெற்ற படகு போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழகினார்.  சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி படைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இறுதி போட்டியை துவக்கி வைத்தார்.  பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் அவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் இருப்பது போன்று நினைவுப்படுத்தையும், கலைஞர் நினைவாக 3.5 அடி பேனா சின்னம் வழங்கினர். 

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 40 வருடங்களுக்கு பிறகு இந்த கோவளத்தில் படகு போட்டி நடைபெற்று இருக்கிறது.  விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முதல் முதலாவதாக வந்து இருக்கிறேன்.  கழக கொடியேற்றுதல் நிகழ்ச்சி இந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் தான் அதிகமாக கலந்து கொண்டு இருக்கிறேன்.  என்னுடைய தொகுதியில் 2 பகுதிகளில் உள்ள வீடுகளை கட்டி தருமாறு மேடையில் இருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.  முன்னாள் எம்.பி.ஆர்.எஸ்.பாரதி என்னோட ராசியில் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறினார்.  எனக்கு ராசி மீது நம்பிக்கை இல்லை என்றார்.உழைப்பு மட்டும் தான் நமக்கு வெற்றி என்றார்.  அதிமுகவினர் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறவர்கள்.  எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் யாருக்காகவது உண்மையாக இருந்து இருக்கிறாரா?

ஆளுநருக்கு அடிமையாக இருக்கக் கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.  சசிகலா அம்மையார் காலை பிடித்து தான் முதலமைச்சர் ஆனர். ஒரு கட்டத்தில் நீங்கள் வந்து ஓட்டு கேட்டிற்களா என்று சசிகலா அம்மையாரை பார்த்து கேட்டவர் எடப்பாடி.  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பாஜக-வின் அலுவலக வாசலில் போட்டி போட்டு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  பாஜாக ஒரு கட்சியே இல்லை. பாஜக அது ஒரு ஆடியோ வீடியோ கட்சி. பிளாக்மைல் (Block mail) பண்ற கட்சி பாஜக.  அதானி என்ற நிறுவனம் கடந்த 8 வருடங்களில் எப்படி இவ்வளவு பணக்காரர் ஆனர்கள் 20 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே இருந்து வந்தது என்று கேட்டார் ராகுல்காந்தி. அதனால் இந்த மோடி பாஜக ஆட்சி அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த பாஜாகவும், அதிமுகவுன் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று கூறி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும் என்றார்.  

பின்னர் மோட்டார் மற்றும் துடுப்பு படகு போட்டியில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூபாய் 1.90 ஆயிரம் மதிப்பிலான பைபர் படகு, இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 69 ஆயிரம் மதிப்பிலான படகு என்ஜின், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 39 ஆயிரம் மதிப்பிலான பைபர் படகு ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு ஒரு சவரன் தங்க செயின் பரிசாக வழங்கப்பட்டது.  உடன் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ். ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  பின்னர் சுமார் அப்பகுதியை சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு தையல் மெஷின், இஸ்திரிபெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.