Dhanush: மாஜி அண்ணி, தற்போதைய அண்ணி: தனுஷ் எப்பவுமே அப்படித் தான்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தனுஷ் தன் முன்னாள் அண்ணி சோனியா அகர்வாலாகட்டும், தற்போதைய அண்ணி கீதாஞ்சலியாகட்டும் ஒரே மாதிரி தான் பார்க்கிறார்.

​தனுஷ்​தனுஷுடன் சேர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வால் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தார். தன் முதல் பட ஹீரோவான தனுஷுக்கு அண்ணியானார். ஆனால் திருமணமான நான்கு ஆண்டுகளில் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் தனுஷும், சோனியாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் அண்மையில் சமூக வலைதளத்தில் வலம் வந்தது.
​விளாசல்​
தனுஷ், சோனியா அகர்வாலின் புகைப்படத்தை பார்த்தவர்கள் தனுஷை தான் விளாசினார்கள். அண்ணி என்கிற மரியாதை இல்லாமல் தோள் மீது கை போடுவதா என சமூக வலைதளவாசிகள் விமர்சித்தார்கள். அவர் சோனியா அகர்வால் மீது மட்டும் அல்ல தற்போதைய அண்ணியான கீதாஞ்சலியின் தோள் மீதும் கை போட்டு புகைப்படம் எடுத்திருக்கிறார்.
​கீதாஞ்சலி​கீதாஞ்சலி தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுத்தார். மேலும் அண்ணியின் கழுத்தை நெறிப்பது போன்றும் கூட போஸ் கொடுத்திருக்கிறார். அண்ணி விஷயத்தில் தனுஷ் எப்பொழுதும் ஒரே விதமாக தான் நடந்து கொள்கிறார். தன் அண்ணன் மனைவியை அண்ணியாக அல்ல மாறாக அம்மாவாக பார்க்கிறார் தனுஷ். அதனால் அம்மா தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுப்பது தவறு இல்லையே என்கிறார்கள் ரசிகர்கள்.

​செல்வராகவன்​சோனியா அகர்வாலை பிரிந்த செல்வராகவன் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும் தனுஷ் இனி கல்யாணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று இருக்கிறாராம். கடைசி வரை சிங்கிளாகவே இருந்துவிட்டு போவது என்று முடிவு செய்திருக்கிறாராம். முன்னதாக செல்வராகவனுக்கு விவாகரத்து நடந்தபோதே மீண்டும் கல்யாணம் பண்ணாதே அண்ணா என அறிவுரை வழங்கினாராம் தனுஷ்.

​மீனா​தனுஷ் தன் படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம் என நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார். மேலும் தனுஷுக்கும், மீனாவுக்கும் பாடி டிமான்ட் இருக்கும். அதனால் திருமணம் செய்து கொள்வதில் தப்பில்ல என்றார். அதை பார்த்த தனுஷ் மற்றும் மீனாவின் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை விளாசினார்கள்.

​Dhanush, Meena: தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம், பாடி டிமான்ட் இருக்கும்: பயில்வான் ரங்கநாதனை விளாசும் ரசிகர்கள்​
​கேப்டன் மில்லர்​Dhanush: மறுபடியும் தனுஷுக்கு அதே பிரச்சனை: பாவம், என்ன செய்யப் போறாரோகெரியரை பொறுத்தவரை அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தென்காசி காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் கசிந்தது. அந்த வீடியோவை எடுத்தது ரசிகர்கள் என்று கூறப்படுகிறது. தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ கசிவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.