கள்ளக்குறிச்சி : தந்தை இறந்ததாக இறுதி சடங்கு செய்த மகன்கள்.! உயிருடன் திரும்பி வந்த சம்பவம்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணி குடும்ப பிரச்சினை காரணமாக சில நாட்களுக்கு முன்பு வேட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து சுப்ரமியனியனின் மகன்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். 

இதற்கிடையில் தியாகதுருகம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் முதியவர் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி, வனத்துறையினர் மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதைப்பார்த்த சுப்பிரமணியனின் மகன்கள் தனது தந்தைதான் என்று முடிவு செய்து பிணத்தை வாங்கிக்கொண்டு கொண்டு வீட்டிற்கு வந்தனர் 

பின்னர் தந்தை உயிரிழந்துவிட்டதாக  உறவினர்களுக்கு தகவல் சொல்லி, இறுதி சடங்கிற்கான வேலைகளை ஆரம்பித்தனர். அப்போது, உறவினர்களில் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மாலை வாங்குவதற்கு சென்றார். அப்போது கடைவீதியில் சுப்பிரமணி எதிரே நடந்து வந்துள்ளார். 

இதைப் பார்த்த சுப்பிரமணியின் உறவினர் அதிர்ச்சியில் நின்றுள்ளார். பிறகு, அவரிடம் சென்று  நீங்கள் இறந்துவிட்டதாக கூறி உங்களது மகன்கள் பிணத்தை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றுத் தெரிவித்தார்.

இதைக் கேட்டு, பதறி அடித்துக் கொண்டு சுப்பிரமணியம் கிராமத்திற்கு சென்றார். அங்கு சுப்பிரமணி உயிரோடு வந்ததை பார்த்ததும் அவரது குடும்பத்தினர்கள் உட்பட ஒட்டு மொத்த கிராம மக்களே அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.