நிலம் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கட்டணம் குறைப்பு – பதிவுத்துறை ஐஜி..!

பத்திர பதிவுத்துறை மூலம் விலை நிலங்கள் பதிவு கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்தி மதிப்புகளை மாற்ற வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

அதுகுறித்த சுற்றறிக்கையில், “01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக்கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.

சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும் பதிவுக்கட்டணத்தை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தை பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால் அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும் வரை வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க, பதிவுக்கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.” மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பார்வை (2)-ல் காணும் அரசு கடிதத்தில், 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக தற்போதைய வழிகாட்டி மதிப்பை மாற்றிட மதிப்பீட்டுக்குழுவில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம் எனவும், 09.06.2017 அன்று அல்லது அதன் பின்பு விளைநிலங்கள், மனைகளாக மாற்றப்பட்டுள்ள நிகழ்வில், நிர்ணயிக்கப்பட்ட மனை மதிப்பானது 08.06.2017

அன்றிருந்த மதிப்புடன் ஒப்புநோக்கப்பட்டு இவற்றில் எது அதிகமோ அதனை வழிகாட்டி மதிப்பாக இருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதனை நடைமுறைபடுத்துவது தொடர்பாக மதிப்பீட்டுக்குழுவில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

1. 01.04.2023 முதல் சந்தை வழிகாட்டி மதிப்பினை 08.06.2017 கடைபிடிக்கப்பட்டு வந்த சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக தற்போதைய வழிகாட்டி மதிப்பை மாற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.