ஆதார் தரவுகளை பயன்படுத்த மாட்டோம்| We will not use Aadhaar data

புதுடில்லி, ‘மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆதார் தரவுகளை பயன்படுத்தும் திட்டம் இல்லை’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து லோக்சபாவில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது:

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ஆதார் தரவுகளை பயன்படுத்தும் திட்டம் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனர் தெரிவித்துள்ளனர். எங்கள் நிலைப்பாடும் இது தான்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்படி கடந்த பிப்., மாதம் வரை, 136 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்த பின், உயிருடன் இருப்பவர்களில் 130.6 கோடி பேரிடம் ஆதார் எண் உள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.