கார்த்தி படத்தில் ஹீரோயின் வேடம்; காயத்ரி பரத்வாஜ் விலகல்: கிரித்தி ஷெட்டி என்ட்ரி

சென்னை: கார்த்தி படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்த காயத்ரி பரத்வாஜ் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். காதல் கதை கொண்ட காமெடி படமாக இது உருவாகிறது. இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு நலன் குமாரசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

நலன் குமாரசாமி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க காயத்ரி பரத்வாஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவர் இந்தியில் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் திடீரென இவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தெலுங்கு நடிகையான கிரித்தி ஷெட்டி கார்த்தி ஜோடியாக நடிக்க ேதர்வாகியுள்ளார். தமிழில் பாலா இயக்கி வந்த வணங்கான் படத்தில் சூர்யாவுடன் கிரித்தி ஷெட்டி நடித்து வந்தார். அந்த படத்திலிருந்து சூர்யா விலகியதால், கிரித்தியும் நீக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது கார்த்தியுடன் இந்த படத்திலும் ஜெயம் ரவியுடன் மற்றொரு தமிழ் படத்திலும் கிரித்தி நடிக்க உள்ளார்.

The post கார்த்தி படத்தில் ஹீரோயின் வேடம்; காயத்ரி பரத்வாஜ் விலகல்: கிரித்தி ஷெட்டி என்ட்ரி appeared first on Kollywood News | Kollywood Images – Cinema.dinakaran.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.