Dasara: 'வாட் எ பிரிலியன்ட் ஃபிலிம்'… தசரா படத்தை பாராட்டிய மெகா ஸ்டார்!

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான திரைப்படம் தசரா. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நானி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
Pooja Ramachandran: பூஜா ராமச்சந்திரனின் புதிய மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்.. சூடாகும் இணையம்!

கடந்த 30 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தசரா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தசரா திரைப்படம் இதுவரை உலக அளவில் 110 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தசரா திரைப்படத்தை பார்த்த தெலுங்கு மெகா ஸ்டரான நடிகர் சிரஞ்சீவி படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவில், ” டியர் நானி… தசரா திரைப்படம் பார்த்தேன். என்ன ஒரு அருமையான படம். உங்களின் பர்ஃபாமன்ஸால் கொன்று விட்டீர்கள். இது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் முதல் படம் என்பதை அறிந்து பிரமித்து போனேன்.

கர்ப்ப காலத்தை கொண்டாடும் நடிகை!

அவருடைய சூப்பர் கைவினையை பாராட்டுகிறேன். எங்களது ‘மகாநடி’ கீர்த்தி சுரேஷின் நடிப்பு வாவ். தீக்ஷித்தும் சிறப்பாக செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் அசத்திவிட்டார். தசரா படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று நடிகர் சிரஞ்சீவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிரஞ்சீவியின் இந்த பாராட்டு தசரா படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரஞ்சீவியின் இந்த பதிவுக்கு நடிகர் நானி தெரிவித்து பதில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் நீங்கள் எப்போதும் எங்கள் மெகாஸ்டார் சார். திரையுலகில் மட்டுமின்றி, சினிமாவுக்காகவும், அதைச் சார்ந்த அனைவருக்காகவும் எப்போதும் இருக்கும் மெகா இதயத்திற்கு மெகாஸ்டார் என குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளார்.

Babloo Prithiveeraj: முதல் மனைவியை விவாகரத்து செய்தது இதனால்தான்.. மனம் திறந்த நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்!

நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகர் நானியின் இந்த பதிவுகள் வைரலாகி வருகிறது. இருவரின் ரசிகர்களும் இந்த பதிவுகளுக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.