Lingusamy: ஆறு மாத சிறை தண்டனை: இயக்குனர் லிங்குசாமி பரபரப்பு விளக்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் லிங்குசாமி. இவருக்கு நீதிமன்றம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர் லிங்குசாமி தரப்பு விளக்கமளித்துள்ளது.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்தவர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா, பையா, அஞ்சான் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக ராம் பொத்தினேனி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான ‘வாரியர்ஸ்’ படத்தை இயக்கினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அத்துடன் தனது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தீபாவளி, கும்கி வழக்கு எண் 18 கீழ் 9, இவன் வேற மாதிரி, கோலி சோடா, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை இயக்குவதற்காக பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1.3 கோடியை கடனாக பெற்றுள்ளார் லிங்குசாமி.

ஆனால் இந்தப்படம் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து லிங்குசாமி கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தகோரி பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து ரூ.35 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார் லிங்குசாமி. இந்த செக் போதுமான பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆகியுள்ளது.

Ajith Kumar: தாமதமாகும் ‘ஏகே 62’.. மீண்டும் இணையும் ஹிட் காம்போ: அஜித்தின் அதிரடி முடிவு.!

இதனால் பிவிபி நிறுவனம் லிங்குசாமிக்கு எதிராக செக் மோசடி வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில் லிங்குசாமிக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் லிங்குசாமி தரப்பிலிருந்து செய்யப்பட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தற்போது இயக்குனர் லிங்குசாமி தரப்பு விளக்கமளித்துள்ளது. அதில், இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிரைவேட் மீடியா இடையிலானது. அவர்கள் கொடுத்த மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல குடும்பத்துல பிறந்த.. உச்சக்கட்டத்தை எட்டும் பிக்பாஸ் அபிராமி, குட்டி பத்மினி மோதல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.