Tamil News Live Today: திமுக ஃபைல்ஸ்: இன்று காலை 10.15 மணிக்கு திமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!

இன்றுதிமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில், `தி.மு.க-வின் ஊழல் பட்டியல் இன்று காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

“தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் காலை சரியாக 10.15 மணிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை ( DMK FILES) திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுகிறார்.” என பாஜக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை விஷீ கனி காணுதல் நிகழ்ச்சி மற்றும் சுவாமி தரிசனம் செய்து வரும் பொதுமக்கள்.!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.