நியூசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20க்கு 20 முதலாவது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் 05 பந்துகளில் 182 ஓட்டங்களைப் பெற்றது. பக்கர் ஸ்மான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தலா 47 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மத்தியூ ஹென்றி 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி களம் இறங்கிய வருகை தந்த நியூசிலாந்து அணியால் 15 ஓவர்கள் 03 பந்துகள் முடிவில் 94 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

மார்க் செப்மன் 34 ஓட்டங்களைப் பெற்றார். 18 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹெரிஸ் ரவூப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 05 போட்டிகள் கொண்ட 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.