மஞ்சள் ஜெர்சியில் நிரம்பி வழிந்த மைதானம்! எனக்கு ஃபேர்வெல் தருவதற்காக இப்படி வந்திருக்கிறார்கள்: தோனி உருக்கம்



எனக்கு ஃபேர்வெல் தருவதற்காக ரசிகர்கள் இப்படி மஞ்சள் ஜெர்சியில் வந்து இருக்கிறார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

 
ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி அதிரடியாக 235 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 


ஃபேர்வெல் தருவதற்காக வந்திருக்கிறார்கள்

இந்த போட்டி கொல்கத்தா அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் நடைபெற்ற நிலையில், மைதானம் முழுவதும் கொல்கத்தா ரசிகர்களுக்கு மாறாக சென்னை அணி ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

அத்துடன் மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஆடைகள் மட்டுமே அலையலையாய் காணப்பட்டது.
இந்நிலையில் போட்டியின் நிறைவுக்கு பிறகு தொகுப்பாளரிடம் உரையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கொல்கத்தா ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அப்போது கொல்கத்தா மைதானம் மஞ்சள் ஜெர்சியால் நிறைந்து காணப்படுவது குறித்து தொகுப்பாளர் தோனிடம் கேட்டதற்கு, கொல்கத்தா அணி ஆடும் அடுத்த போட்டியில் ரசிகர்கள் அனைவரும் கொல்கத்தா ஜெர்சி அணிந்து அவர்களுக்கு தான் ஆதரவு அளிக்கப் போகிறார்கள், இந்த போட்டியில் ரசிகர்கள் அனைவரும் எனக்கு ஃபேர்வெல் தருவதற்காக இப்படி மஞ்சள் ஜெர்சியில் வந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

மேலும் கொல்கத்தா மைதானத்தில் நிறைய போட்டிகள் விளையாடி உள்ளேன், இங்கிருந்து நான் பணி புரிந்த கரக்பூர் ரயில் நிலையத்திற்கு 2 மணி நேரத்தில் சென்று விட முடியும், கொல்கத்தா மைதானத்துடனான அந்த பந்தம் நீள்கிறது என்றும் தோனி குறிப்பிட்டுள்ளார். 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.