நியூசிலாந்தில் 7.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை!

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கெர்மாடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று காலை இந்திய நேரப்படி 6.11 மணிக்கு நியூசிலாந்தில் கெர்மாடெக் தீவுகளில் 10 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி ஏற்படும் என்பதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை. இதுவரை எந்த உயிரிழப்புகளோ பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

7.3 magnitude earthquake felt in Newzealand, No Tsunami alert

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.