சிலரின் போதையூட்டக்கூடிய கருத்துக்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

பெரும்போக அறுவடையின் போது அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்கி வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, வேலனை பிரதேச செயலகத்தில் இன்று (28.04.2023) இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வருமானம் குறைந்த மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 இலட்சம் குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி பொதி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார்.

கிளிநொச்சி விவசாயிகளை ஜனாதிபதி களத்தில் சந்தித்தபோது நெல்லுக்கான உத்தரவாத விலையினை நூறு ரூபாவாக அறிவித்து இந்த திட்டத்தையும் அவர் அதில் அறிவித்திருந்தார்.

வட மாகாணத்தை பொறுத்தவரையில் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களைவிட சிறப்பாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும், கிளிநொச்சியில் 800 ஏக்கள் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தமை தொடர்பில் எந்தவிதமான உண்மையும் இல்லை, நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.