இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


தோலில் பயன்படுத்தப்படும் அனைத்து முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் பொடி லோஷன்களில் அதிகபட்ச வரம்பைத் தாண்டி கன உலோகங்கள் இருப்பதும் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​எந்தவொரு பொறுப்பான தகவலும் மற்றும் தேவையான சட்டப் பணிகளும் குறிப்பிடப்படாமல், சந்தைகளில் பொடி லோஷன் பொதிகளில் (பேக்கேஜிங்கில்) முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Whitening Cream And Body Lotion Side Effect

சட்ட நடவடிக்கை

இது தொடர்பாக செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறாக சட்டவிரோத முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் திரவங்களை விற்பனை செய்த மேலும் பல கடைகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எத்தனை சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வெள்ளையாக்கும் முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் திரவங்களுக்கு அதிக தேவை இருப்பதால், அத்தகைய தயாரிப்புகளை கட்டுப்படுத்துவதில் தடையாக இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Whitening Cream And Body Lotion Side Effect

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரி்க்கை

எனவே, சரீர லோஷன்களை கொள்வனவு செய்யும் போது, ​​இலங்கையிலுள்ள பொறுப்பான நிறுவனமொன்றின் தகவல்கள், ஏனைய தகவல்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து அவற்றை கொள்வனவு செய்யுமாறு கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களிடம் கோருகிறது.

இந்த சோதனைகள் மற்றும் விசாரணைகளை கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு. ரஞ்சனா தலைமையில், பியல் சமரநாயக்க, எஸ். பி. புஞ்சிஹேவா, தனுக குணரத்ன, அரவிந்த ஷாலிக்க, யசித இஷான் ஆகிய அதிகாரிகள் இதனைச் செய்துள்ளதாகவும், அவ்வாறான பொருட்களை சந்தையில் இருந்து அகற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.