Vidaamuyarchi: விடாமுயற்சி படத்திற்காக அஜித் வாங்கவிருக்கும் சம்பளம்..அள்ளிக்கொடுத்த லைக்கா..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

​சம்பளம்அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக கிட்டத்தட்ட 105 கோடி வரை சம்பளமாக வாங்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடைசியாக அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடித்த மூன்று படங்களுக்கு 70 கோடி வரை சம்பளமாக வாங்கினார். இதைத்தொடர்ந்து தற்போது அஜித் விடாமுயற்சி படத்திற்காக 105 கோடியை சம்பளமாக பெற இருக்கிறாராம். போனி கபுருடன் அஜித் மூன்று படங்களில் நடிப்பதாகவும், அந்த மூன்று படங்களுக்கும் தலா 70 கோடி சம்பளமாக பெறுவதாகவும் கடந்த 2019 ஆம் ஆண்டே ஒப்பந்தம் போட்டுவிட்டார் அஜித். எனவே அதன் காரணமாகத்தான் கடந்த மூன்று படங்களாக அஜித் சம்பளத்தை ஏற்றவில்லை என்றும், தற்போது தான் அஜித் சம்பளத்தை ஏற்றியுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன.

​கதைக்களம்அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த டைட்டிலை ரசிகர்கள் தற்போது டீகோட் செய்து வருகின்றனர். படக்குழு வெளியிட்ட டைட்டில் போஸ்டரில் விடாமுயற்சி என்ற டைட்டிலில் ற் என்ற எழுத்தில் இருக்கும் புள்ளி தேடல் என்பதை உணர்த்துகின்றது. எனவே இப்படத்தில் அஜித் ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரை தேடுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். மேலும் இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகும் திரில்லர் படம் என்பதால் அஜித்தை நாம் செம ஸ்டைலாக பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

​விடாமுயற்சிஅஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் AK62 உருவாகயிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு படக்குழு டபுள் ட்ரீட் அளித்துள்ளது. வெறும் படத்தின் அறிவிப்பை மட்டும் வெளியிடாமல் டைட்டிலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அஜித் மீண்டும் வழக்கம்போல V சென்டிமெண்டை இந்த படத்திலும் தொடர்கிறார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

​ஒருவழியாககடந்த ஐந்து மாதங்களாக அஜித்தின் AK62 அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போ வரும் என்பது தான் ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது. கடந்தாண்டே AK62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது என்றாலும் திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவனை படக்குழு அதிரடியாக நீக்கியது. இதையடுத்து மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் என முடிவானாலும் படக்குழு இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே இயக்குனர் முடிவாகியும் ஏன் அறிவிப்பு வெளியாகவில்லை என குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் தற்போது ஐந்து மாதங்களுக்கு பிறகு ஒருவழியாக AK62 அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.