நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2023 மே 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு.

2023 மே 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களுக்கு பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப்பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.