Tamil News Live Today: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு… தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு-க்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு ஆளுநர் ரவி பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்தும் பேசுகையில், “சட்டமன்றத்தில் எனது உரையில் கோயில்களைச் சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் பாராட்ட வேண்டும் என அரசு விரும்பியது. ஆனால் HR & CE- ன் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022-ல் என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள். பொது தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாக சமூக நலத்துறையின் அரசு அதிகாரிகள் எட்டு புகார்கள் அளித்தனர். ஆனால் அத்தகைய திருமணங்களே நடைபெறவில்லை. இருப்பினும் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு ஆறாவது, ஏழாவது படிக்கும் சிறுமிகளை மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இருவிரல் பரிசோதனை செய்தனர். அவர்களில் சிலர் தற்கொலைக்கு கூட முயன்றனர். இது என்னவென்று கேட்டு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். இப்போது இதையெல்லாம் பார்த்த பிறகும் நான் அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா…?” என பேசி இருந்தார்.

ஆளுநர் ரவி

இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு-க்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 6,7-ம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் ரவி குற்றச்சாட்டி இருந்த நிலையில், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் என புகார் எழுந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.