தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… லிஸ்டில் வந்த மாவட்ட ஆட்சியர்கள் யார், யார் தெரியுமா?

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய மாவட்டங்களின் ஆட்சியர்களும் அடங்குவர்.

1 –
நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் ஐஏஎஸ்,
கடலூர் மாவட்ட ஆட்சியராக
மாற்றப்பட்டுள்ளார்.

2 –
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேலாண்மை துறை இணை செயலாளர் அன்னி மேரி ஸ்வர்னா,
அரியலூர் மாவட்ட ஆட்சியராக
மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப்,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

IAS Officers Transfer List

4 – சென்னை வணிகவரித் துறை இணை ஆணையராக (புலனாய்வு) இருந்த ஐ.எஸ்.மெர்சி ரம்யா,
புதுக்கோட்டை ஆட்சியராக
மாற்றப்பட்டுள்ளார்.

5 – தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் எஸ்.உமா ஐஏஎஸ்,
நாமக்கல் ஆட்சியராக
மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6 – நில அளவீடு மற்றும் பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநர் கலைசெல்வி மோகன் ஐஏஎஸ்,
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

7 – தமிழ்நாடு ஃபைபர்நெட் கழக மேலாண் இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர்,
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக
மாற்றப்பட்டார்.

8 – சென்னை வணிகவரித் துறை இணை ஆணையர் (நிர்வாகம்) எம்.எஸ்.சங்கீதா,
மதுரை ஆட்சியராக
மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

9 – GUIDANCE செயல் இயக்குநர் ஆஷா அஜித் ஐஏஎஸ்,
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக
மாற்றப்பட்டார்.

10 – நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் பி.விஷ்ணு சந்திரன்,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக
மாற்றப்பட்டார்.

11 – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.ஆர்.ராகுல் நாத்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக
பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

TN Govt IAS Transfer List

12 – சேலம் மாநகராட்சி ஆணையர் டி.கிறிஸ்துராஜ் ஐஏஎஸ்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக
மாற்றப்பட்டார்.

13 – சென்னை மெட்ரோபாலிடன் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய செயல் இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா ஐஏஎஸ்,
ஈரோடு ஆட்சியராக
மாற்றப்பட்டார்.

14 – சேலம் SAGOSERVE மேலாண் இயக்குநர் எம்.என்.பூங்கொடி ஐஏஎஸ்,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக
பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

15 – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ்,
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக
மாற்றப்பட்டார்.

16 – தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணை மேலாண் இயக்குநர் கே.எம்.சரயு,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக
மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.