லைகா நிறுவன சோதனையால் உதயநிதி-ஓ.பி ரவீந்திரநாத்திற்கு ஆபத்தா?

2008-ல் வெளியான ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை ஞானம் பிலிம்ஸ் உடன் இணைந்து சுபாஸ்கரன் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தார். அதனைத் தொடர்ந்து, ‘கோலமாவு கோகிலா’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய அடையாறு, தி.நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமானது 300 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

லைகா நிறுவனம், வரிசையாக பல படங்களை தயாரிக்கிறது. அனைத்துமே பெரிய ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்கள். லைகா நிறுவனம் 2022-2023 நிதியாண்டிற்கான தங்களது வருமானத்தை மறைத்து பொய்க்கணக்கு காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் லைகா நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். 

தொழிலதிபர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழ்குமரன் செயல்பட்டு வருகிறார். கமலின் ‘இந்தியன் 2’ ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7 மணி முதல் நடைப்பெற்று வரும் சோதனையில் எந்த வித சலசலப்பும் குழப்பமும் ஏற்படாமல் இருப்பதற்காக அங்கே துப்பாக்கி ஏந்திய ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அமலாக்கத்துறையினர் கைப்பற்றும் ஆவணங்கள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.

தற்போது வரை வெளியாகியுள்ள தகவல்களின் படி, அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் ரூபாய் 1 கோடி அளித்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரநாத்திற்கு லைகா நிறுவனம் 8.5கோடி ரூபாய் வழங்கியுள்ளதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரனையில் இவர்கள் இருவரிடத்திலும் விசாரனை மேற்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.