Siddaramaiah: ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என பாஜக அறிவித்தது இதற்காகதான்… சித்தராமையா பொளேர்!

கடந்த 2016ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையுக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து புதிய 2000 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வந்தது.

இந்நிலையில் அந்த நடவடிக்கைக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Aditi Shankar: மெரூன் நிற புடவையில் ஆளைக் கொல்லும் அதிதி ஷங்கர்… அசந்து போகும் ரசிகர்கள்!

மேலும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திடீரென 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இன்று கர்நாடக முதல்வராக பதவி ஏற்கவுள்ள சித்தராமையா(

Siddaramaiah) இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, பிரதமர் மோடியால் மீண்டும் ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே தெளிவு இல்லை என்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Duraimurugan: ஸ்டாலினுக்கு வந்த புது பிரச்சனை… அமைச்சர் துரைமுருகன் மீது ஆளுநரிடம் ‘தகவல் தாத்தா’ புகார்.. பரபரப்பு!

மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் திட்டம் இருந்தால் ஏன் அதனை அறிமுகப்படுத்த வேண்டும் ? என்று கேள்வி எழுப்பியுள்ள சித்தராமையா, பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே 2000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்துள்ளார்கள் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையா, துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிகே சிவகுமார், மற்றும் 8 அமைச்சர்கள் இன்று மாலை முறைப்படி பதவி ஏற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Khushbu: காஞ்சிபுரம் பட்டில் கேன்ஸ் விருது விழாவில் கலக்கிய குஷ்பு… அசர வைக்கும் போட்டோஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.