சரத் பாபு மறைவு குறித்து உலகநாயகன் கமல் உருக்கம் !

பிரபல நடிகர் சரத் பாபு ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1977-ஆம் ஆண்டு ‘பட்டினப்பிரவேசம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான மெட்டி, முள்ளும் மலரும், உதிரிப்பூர்க்கள், சட்டம், சங்கர், குரு, வேலைக்காரன், முத்து, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்சனை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்தன. கடந்த சில நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மரணமடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சரத் பாபு மறைவிற்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி என்று குறிப்பிட்டுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.