Prime Minister Modi arrived in Australia | ஆஸ்திரேலியா சென்றடைந்தார் பிரதமர் மோடி

சிட்னி: பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா சென்றார். அங்கு இந்தியாவின் கூட்டாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 12 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.

பின்னர், இன்று (மே 22) ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சிட்னி விமான நிலையத்தில் அவரை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் வரவேற்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.