A fake video of a bomb blast in the Pentagon caused a stir | பென்டகனில் குண்டு வெடித்ததாக பரவிய போலி வீடியோவால் பரபரப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின்ராணுவத் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட புதியவகை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எந்த அளவுக்கு பலன்களை அளிக்கிறதோ, அதை விட இவற்றை பயன்படுத்தி, பொய் செய்திகள் பரப்பப்படுவது அதிகமாக உள்ளது.

‘ஆர்டிபிஷியஸ் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இதில் இணைந்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக நேற்று சமூக வலைதளங்களில் சில படங்கள் வெளியானது, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2001, செப்., 11ல் அமெரிக்காவில் அல் – குவைதா பயங்கரவாதிகள், விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்தினர். அப்போது பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அது போன்று மற்றொரு தாக்குதல் நடந்துள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பங்கு வர்த்தகமும் திடீரென சரிந்தது.

இந்நிலையில், ‘எந்த ஒரு தாக்குதலும்நடக்கவில்லை’ என, பென்டகன் செய்தி வெளியிட்டது. ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன’ என, பென்டகன் விளக்கம் வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் எங்கிருந்து, யாரால் முதலில் வெளியிடப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.