கண்ணீர் விட்டு அழுத தோனி! அன்றிரவு நடந்தது என்ன?


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கண்ணீர் விட்டு அழுததாக முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், பழைய நிகழ்வொன்றை பகிர்ந்துள்ளார்.

இறுதி சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி

ஐபிஎல் அரையிறுதி போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதியது. இப்போட்டியில் சென்னை அணி 15 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் உட்பட, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சென்னை அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


@twitter

இதனிடையே மகேந்திர சிங் டோனி குறித்த உருக்கமான ஒரு நிகழ்வை, சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனையாளர்களாக, இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன் சிங் பேசிக் கொண்டிருந்தனர்.

கண்ணீர் விட்டு அழுத தோனி 

அப்போது பேசிய ஹர்பஜன் சிங் ‘நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு நிகழ்வு ஒன்று உள்ளது. 2 ஆண்டு தடைக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய போது, ஒரு இரவு அணியினருக்கு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்கள் அழுவதில்லை என்ற பழமொழியை நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அன்று இரவு தோனி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். இதைப்பற்றி யாருக்கும் தெரியாது என நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத தோனி! அன்றிரவு நடந்தது என்ன? | Ms Dhoni Cried That Night Harbhajan Singh Says@twitter

உடனே ஹர்பஜன் சிங் பக்கத்தில் அமர்ந்திருந்த இம்ரான் தாஹிர் ‘ஆம் நிச்சயமாக அப்போது நானும் அங்கு இருந்தேன், தோனிக்கு அது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவரை பார்க்கும் பொழுது இந்த அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் அறிந்தேன்.

அவர் அணியை தன் குடும்பமாக கருதுகிறார், இது எங்கள் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பி வந்து கோப்பையை கைப்பற்றினோம்.

அப்போது மக்கள் எங்கள் அணிக்கு வயதானவர்களின் அணி என பெயர் வைத்தனர். அந்த சீசனில் நானும் அணியிலிருந்தேன், நாங்கள் கோப்பையை வென்றோம், அந்த வெற்றியால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.    





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.