குழந்தைகளை தூங்க வைப்பதற்காக காப்பக ஊழியர் செய்த செயல்: கனடாவில் பரபரப்பு


குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, காப்பக ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஒன்றைக் கொடுத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்மோன் கலந்த பானம்

கியூபெக்கிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குழந்தைகளின் பானத்தில் ஹார்மோன் ஒன்றைக் கலந்துள்ளார்.

தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனான Melatoninஐ, பிள்ளைகளுடைய பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளுக்கு கொடுத்ததாக அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டு பதிவு செய்து, விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

அமைச்சர் கண்டனம்

குழந்தைகளின் பானத்தில் Melatonin கலக்கப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள குடும்பங்கள் நலத்துறை அமைச்சரான Suzanne Roy, தனது துறையும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 

குழந்தைகளை தூங்க வைப்பதற்காக காப்பக ஊழியர் செய்த செயல்: கனடாவில் பரபரப்பு | Nursery Worker Given Hormone Make Sleep Canada

(Martin Chabot/Radio-Canada)

இது கற்பனை கூட செய்துபார்க்க இயலாத ஒரு சூழல் என்று கூறியுள்ள அமைச்சர், நமது குழந்தைகளின் நலனும் பாதுகாப்புமே முதன்மையானவை என்று கூறியுள்ளார்.

குழந்தைகளை தூங்க வைப்பதற்காக காப்பக ஊழியர் செய்த செயல்: கனடாவில் பரபரப்பு | Nursery Worker Given Hormone Make Sleep Canada

 (Jacques Boissinot/The Canadian Press)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.