நடுவானில் திறந்த கதவுகளுடன் பறந்த ஏசியானா விமானம்: மூச்சுத்திணறி அலறிய பயணிகள்:வீடியோ


நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவுகளை பயணி ஒருவர் திடீரென திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடுவானில் திறந்த விமானத்தின் கதவு

வெள்ளிக்கிழமை OZ8124 என்ற ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் (Asiana Airlines) ஜெஜு(Jeju) தீவில் இருந்து தென்கொரியாவின் டேகு(Daegu) நகர் நோக்கி பறந்து கொண்டு இருந்தது.

சுமார் 194 பயணிகளுடன் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை நடுவானில் திறந்துள்ளார்.

இதனால் விமானத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, அத்துடன் பல பயணிகள் மூச்சுத்திணறலில் பாதிக்கப்பட்டனர்.  

பின் திறந்த கதவுகளுடன் பறந்த விமானம் உடனடியாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை விமான பயணி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

Asiana AirlinesGETTY IMAGES

இளைஞர் கைது

இதையடுத்து விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையை ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனம் முடக்கி விட்டுள்ளது. மேலும் அவசரகால கதவின் அருகே அமர்ந்து இருந்த பயணி அதன் பிடியை தொட்டத்தால் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக ஏர்லைன்ஸ் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இதற்கிடையில் விமானத்தின் கதவை சம்பந்தப்பட்ட பயணி எதற்காக திறந்தார் என்பதற்கான நிச்சயமான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் 9க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவ முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Asiana AirlinesYonhap/AFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.