Kamal: ரீரிலீஸ் வேணும்னு கேட்டியாமே..மீண்டும் வரும் ராகவன்..உலகநாயகன் போட்ட மாஸ்டர் பிளான்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகநாயகன்
கமல்
ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகின்றார். இடையில் சில காலம் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்த கமல் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இதைத்தொடர்ந்து கமல் இனி படங்களில் நடிப்பாரா என்ற கவலை ரசிகர்களிடம் இருந்து வந்தது.

அந்த கவலையை விக்ரம் படத்தின் மூலம் போக்கினார் கமல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தை தானே தயாரித்து மிகப்பெரிய வெற்றியை கண்டார் உலகநாயகன். இப்படத்தின் வெற்றி கொடுத்த தெம்பில் பல படங்களில் நடித்து வருகின்றார் கமல்.

Vijay: தளபதி பர்த்டே ஸ்பெஷல்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்..!

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வரும் கமல் அடுத்ததாக மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இதையடுத்து வினோத்தின் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷின் இயக்கத்தில் ஒரு படம் என வெறித்தனமான லைன்அப்பை கொண்டுள்ளார் கமல்.

நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களை மிகப்பிரமாண்டமாக தயாரித்து வருகின்றார் கமல். இந்நிலையில் விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் அடுத்த ரிலீஸ் இந்தியன் 2 படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்திற்கு முன்பே கமலின் மற்றொரு படம் திரையில் வெளியாகவுள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமலின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற வேட்டையாடு விளையாடு திரைப்படம் தற்போது ரீரிலீசாக இருக்கின்றது. கௌதம் மேனனின் இயக்கம், கமலின் நடிப்பு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை என அனைத்துமே இப்படத்தில் ஹைலைட்டாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ராகவன் என்ற போலீஸ் அதிகாரியாக கமல் இப்படத்தில் கலக்கியிருப்பார். அப்படி இருக்கையில் இப்படம் ஜூன் மாதம் புதுப்பொலிவுடன் ரீரிலீஸாகவுள்ளது. இந்த தகவல் கமல் ரசிங்கர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை உருவாக்கி வருவதாகவும், விரைவில் இதனைப்பற்றிய அறிவிப்பு வரும் எனவும் தகவல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தற்போது வேட்டையாடு விளையாடு படம் திரையில் மீண்டும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் திட்டத்தில் தான் இப்படத்தை திரையில் மறுவெளியீடு செய்து, ரசிகர்கள் இப்படத்திற்கு எந்தளவிற்கு ஆதரவு தருகிறார்கள் என பார்க்கவே கமல் திட்டமிட்டுள்ளார் என சிலர் பேசி வருகின்றனர்.

எனவே ரசிகர்களின் ஆதவாறு அமோகமாக இருக்கும் பட்சத்தில் கமல் கண்டிப்பாக வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.