Nothing Phone 2 ஸ்மார்ட்போன் பெரிய பேட்டரி மற்றும் சிப் உடன் ஜூலை வெளியாகும்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Oneplus நிறுவனத்தின்
இணை நிறுவனர் கார்ல் பெய் தனியாக தொடங்கியுள்ள Nothing நிறுவனம் அதன் புதிய Phone 2 ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தய ஜெனரேஷன் போனான Nothing 1 ஸ்மார்ட்போனை விட கூடுதல் பேட்டரி, சிப் மற்றும் கேமரா திறன் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த போனில் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில் இப்போது இந்த போன் ஒரு மிகப்பெரிய 4700mAh பேட்டரி வசதி கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Nothing Phone 1 வேரியண்ட் 4500mAh பேட்டரி, Qualcomm Snapdragon 778+ 5G சிப் கொண்டிருந்தது. இந்த புதிய போனின் டிசைன் பொறுத்தவரை தற்போது இருக்கும் Phone 1 போன்றே Glyph டிசைன், பேக் பேனல், LED இண்டிகேட்டர் போன்ற வசதிகள் கொண்டிருக்கும்.

இன்னும் வரும் வாரங்களில் இந்த போன் பற்றிய மேலும் விவரங்கள் வெளியாகும். மிகமுக்கிய அம்சமாக இதன் கேமரா திறன் மேம்படுத்தப்படும் என்றும், போட்டியாளர்களுக்கு நிகரான OS இல்லை என்றாலும் தொடர்ந்து அதில் வேலை செய்துவருவதாக Nothing நிறுவனம் கூறியுள்ளது.

Apple iphone 16 மற்றும் 15’இல் முக்கிய மாற்றங்கள் இடம்பெரும்! ஆப்பிள் அறிவிப்பு!

இந்த போனில் இப்போது RAW HDR, 60fps 4K ரெகார்ட் வசதி, ட்ரிபிள் கேமரா வசதி இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும் இதில் 12GB RAM, Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Nothing OS, FHD+ 120HZ AMOLED டிஸ்பிளே, 256GB ஸ்டோரேஜ் இடம்பெறும். இதில் வாடிக்கையாளர்களுக்கு வாங்க வசதியாக 8GB RAM, 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலும் இருக்கும்.

கடந்த முறை அமெரிக்காவில் இந்த போன் வெளியாகவில்லை. ஆனால் இம்முறை இந்த நிறுவனத்தின் தலைசிறந்த போனை அமெரிக்க சந்தையிலும் Nothing நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. இந்தியாவில் இந்த போன் Nothing Phone 1 போலவே Flipkart மூலம் விற்பனை செய்யப்படும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.