அதிர்ச்சி! அமேசானில் அதிரடியாக உயர்ந்த பொருட்களின் விலை!

அமேசான் ஷாப்பிங் தளத்தில் வீட்டுக்கு தேவையான டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி, ஏர் கூலர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும், முக அழகுக்கு தேவையான க்ரீம், சீரம், போன்றவைகளும், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விதவிதமான உடைகளையும் நமது விருப்பப்படி, கவர்ச்சிகரமான தள்ளுபடி விலைகளில் வாங்கி கொள்ளாலாம்.  மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான அமேசன் ஷாப்பிங் அடுத்த மாதத்திலிருந்து விலை உயர்ந்ததாக மாறப்போகிறது, ஏனெனில் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் தங்களது தளத்தின் விற்பனையாளர்களிடம் இருந்து தனது கமிஷனை அதிகரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.  சந்தையின் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமேசான் நிறுவனம் தனது செலவைக் குறைக்க விரும்புவதால், அமேசான் அனைத்து விற்பனையாளர்களிடமிருந்தும் அதிக கமிஷனை வசூலிக்கப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  அமேசான் மேற்கொள்ளப்போகும் இந்த நடவடிக்கையின் மூலம் இந்த ஷாப்பிங் தளத்தில் இருந்து நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  ஏனெனில் அமேசான் மேற்கொள்ளப்போகும் அதிக கமிஷன் கட்டண முறை ஜூன் மாதம் முதல் அமேசானில் உள்ள தயாரிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  கமிஷன் அதிகரிப்பு எலக்ட்ரானிக்ஸ், கண்ணாடிகள், ஆடைகள் மற்றும் பல வகைகளில் தயாரிப்புகளை பாதிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆஃப்லைனில் நாம் வாங்கக்கூடிய பொருட்களை காட்டிலும் ஆன்லைனில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள், பல கண்கவர் பொருட்கள், விதவிதமான தயாரிப்புகளை குறைவான விலையில் வாங்கிக்கொள்ள முடியும். தற்போது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் அமேசானின் இந்த புதிய மாற்றங்கள், அமேசான் ஃபிளாட்பாரத்தில் ஷாப்பிங் செய்யும் நபர்கள் மற்றும் அவர்கள் வாங்கும் பொருட்களின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.  அமேசானில் உள்ள தயாரிப்புகளின் விலை எவ்வளவு அதிகரிக்கப்போகிறது என்பதை பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை, ஆனால் அமேசான் வசூலிக்கும் கமிஷன் கட்டணத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், எடுத்துக்காட்டாக, 2 சதவீதம் உயர்வு இருந்தால் அதே எண்ணிக்கை நுகர்வோருக்கு அனுப்பப்படலாம்.  இந்த விலை உயர்வுக்கான காரணம் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் பல்வேறு மேக்ரோ பொருளாதார காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அமேசான் தெளிவாக மேற்கோள் காட்டியுள்ளது.  அமேசான் நிறுவனம் தனது செலவினங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் தனது தளத்திலிருந்து விற்பனையாளர்களை கூடுதல் செலவை ஏற்க வைக்கிறது.  அமேசான் ஏற்கனவே உலக அளவிலும் இந்தியாவிலும் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்பதால் நிறுவனம் கமிஷன் கட்டணத்தை உயர்த்துவதில் முடிவு ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

அமேசான் ஷாப்பிங் தளத்தில் கடந்த 12 மாதங்களில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பது அமேசான் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது.  பொதுவாக ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பண்டிகை காலத்திலும், கோடை காலத்திலும் சிறப்பு விற்பனை மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றனர்.  ஆனால் அடுத்த மாதம் முதல் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு விலையை உயர்த்துவதால், இனிமேல் மக்கள் ஆன்லைனில் பொருட்களை ஷாப்பிங் செய்வதை தவிர்த்து  ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் செல்வார்கள், இது ஆஃப்லைன் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.