டெக்னோ கேமான் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

நொய்டா: டெக்னோ நிறுவனம் இந்தியாவில் டெக்னோ கேமான் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ கேமான் 20, கேமான் 20 புரோ 5ஜி மற்றும் கேமான் 20 ப்ரீமியர் 5ஜி என மூன்று மாடல் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ கேமான் 20 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் ஃபுல்-ஹெச்.டி+ AMOLED ஸ்க்ரீன்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • கேமான் 20 போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் கொண்டுள்ளது
  • கேமான் 20 புரோ போன் மீடியாடெக் டிமான்சிட்டி 8050 சிப்செட் கொண்டுள்ளது
  • 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் திறன்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட்
  • இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 5ஜி இணைப்பு கொண்டுள்ளது கேமான் 20 புரோ
  • கேமான் 20 போனின் விலை ரூ.14,999
  • கேமான் 20 புரோ போனின் விலை ரூ.19,999
  • கேமான் 20 ப்ரீமியர் போனில் கேமரா மட்டுமே மாறுபடுகிறது. பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா இடம் பெற்றுள்ளது. 108 மெகாபிக்சல் அல்ட்ரா-ஒய்டு ஆங்கிள் கேமராவும் உள்ளது. 512 மெகாபிக்சல் கொண்டுள்ளது ஸ்டோரேஜ். மற்றபடி பேட்டரி, திரை அளவு என அனைத்தும் முந்தைய இரண்டு மாடல் போன்களை பிரதிபலிக்கின்றன. வரும் ஜூன் மாத இறுதியில் தான் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.